Skip to main content

Posts

ஊரிக்காடு

  ஊரிக்காட்டின் கடலோரம் ஒதுங்கிக் கிடந்தன அவர்களின் இலட்சியக் கனவுகள் வீடிழந்தோர் வாழ்விழந்தோர் சொந்த நிலமிழந்தோர் கடல் கடந்தோர் உயிரிழந்தோர் உடலுறுப்பிழந்தோர் வாழ்வோர் வாழ்ந்துகொண்டு சாவோர் ஊரிக்காட்டின் கடலோரம் ஒதுங்கிக் கிடந்தன அவர்களின் இலட்சியக் கனவுகள் சற்றுத்தூரத்தில் ஒரு வீடு இடிக்கப்பட்டு அது இருந்த தடயம் அழிக்கப்பட்டுக் கிடந்தது கூடவே அங்கு வாழ்ந்த மனிதரின் கனவும் கனத்த மனதோடு குனிந்து பார்க்கிறேன் கிளிஞ்சல்களுக்குள் சுதந்திரக் கனவு அரித்துப்போய் ஓட்டைகளோடு அநாதரவாய்க் கிடக்கிறது சுற்றுலாப் பயணிபோல் கடந்து போக முடியாமல் தடக்கி நிற்கிறேன்.

கதை கதையாம் கத்தரிக்காய்

                              கதை கதையாம் கத்தரிக்காய் ……………………………………….. மதியச் சாப்பாட்டிற்கும் இரவுச் சாப்பாட்டிற்கும் இடையான நேரம் எல்லோரும் வட்டமாய் கதிரை போட்டிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் முன் வீட்டில் காஸ் முடிந்து விட்டதாம் மரக்கறி விலை சிறிது குறைந்துவிட்டதாம் கோவிட் தொற்று மீண்டும் அதிகரிக்கிறதாம் மாஸ்க்கெல்லாம் மூக்கின் கீழ் இறங்கிவிட்டதாம் வான்படைக்கு வைத்தியாசலை கட்டினமாம் புதுசாவொரு புத்தர் சிலை திறக்கினமாம் திங்கள்வரை மின்சாரம் வெட்டவில்லையாம் பாரதியோட கண்ணம்மா சேரவில்லையாம் பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் திருகுபடியாம் தமிழ்க்கட்சிகள் தங்களுக்க இழுபறியாம் அரசியல்வாதிகளை பொதுமக்கள் நம்பவில்லையாம் அப்பால் நின்று புதினம் மட்டும் பார்க்கினமாம் வானூர்தியில் வந்திறங்கிக் கொண்டாட்டமாம் வயலிலே விளைச்சலின்றித் திண்டாட்டமாம் புலம்பெயர்ந்தார் வாய்ப்பேச்சு தாங்கவில்லையாம் அவையின்ர நிதியுதவி போதவில்லையாம் தெருவிலறங்கிப் போராடுறவை திருந்தவில்லையாம் போராடித்தானிங்கொன்றும் சாதிக்கேலையாம் ‘நீதிக்கான அணுகல்’ நட...

துறத்தல்

  மரத்தில் இருந்து விழுந்த இலை காற்றோடு காற்றாய் இருப்பின்றி அலைவதுபோல் காலவோட்டம் இழுக்குந்திசையெல்லாம் பிடிப்பொன்றின்றி இழுபட்டுக்கொண்டு உயிர் என்னுடல் நீங்கி வெளியே உல்லாசமாய் திரிகின்றது                                    இருப்பும் பிடிப்பும் இருந்து                                    இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு                                    இருந்திருந்தால் உடலிந்நேரம்                                    வேரூன்றி விழுதுவிட்டு                                ...