Skip to main content

Posts

Showing posts from June, 2021

Dear friend!

  Nobody gets me like you do You do see my soul, friend! A soul friend is what you are You are the balm to my wounds My wounds from another life Another life is what they know They know nothing about what I know I know you get me like I do I do love the vibes we create We create happiness and peace And the peace that embraces the human body The human body has a heart and a mind A heart and a mind enjoy the essence of melodic life Melodic life where philosophy thrives Philosophy thrives and everything makes sense Makes sense, you and me, in this universe This universe that we fall in love with again and again Again and again, let’s make magical moments Magical moments when we stop running Stop running and see with your soul Your soul is what I get my friend My friend, I am not easy Not easy to be in a human relationship Human relationship honestly scares me Scares me most the ignorance and ego And ego, oh my, the ugly ghost! Ugly ghost is all we have We have and we ignore We ignore the

🖊கறுப்பு மை 🖊

நேசமிருந்த இடமெல்லாம் இப்போது கோபம் இல்லையில்லை வெறுமை நரம்புகளுக்குள் புகுந்து நெளிந்து உடலெல்லாம் வியாபித்து பெருவிருட்சமாய் விதை போட்டதாய் ஞாபகமில்லை நீர் ஊற்றி வளர்த்தது யார்? நினைவில்லை வெட்டவேண்டும் இது சரியில்லை இராட்சதக் கிளைகளைப் பரப்பிக்கொண்டு வெளிச்சம் உள்ளே வரவிடாமல் கதைகளில் வரும் பேய் மரம் போல! வெட்டவேண்டும் என்று சொல்கிறாளே தவிர அவசரப்படவில்லை பேய் மரத்தின் நிசப்தமும் பயங்கரமும் அது தந்த இருளும் அவளுக்குப் புகலிடமாயிருந்தன மனிதர்களோடு எத்தனை நாட்கள்தான் போலியாய்ப் பழகுவது? எல்லோருக்குள்ளும் ஒரு பேய் மரமிருக்குமோ! ஒருவரும் காட்டுவதில்லை அவளுக்குக் காட்டாமலிருக்க முடிவதில்லை பேச்சிலும் மூச்சிலும் எப்போதுமே ஒரு சூடு கோபம் கறுப்பு மையாய் நாக்கில் நின்றும் விரல் நுனிகளிலிருந்தும் கொட்ட கொட்ட செய்யபோகும் சம்பவங்களை சிந்தித்து சிந்தித்து கிறுக்கியும் அழித்தும் முடிவில்லா அத்தியாயங்களாய் எழுதிக்கொண்டேயிருக்கிறாள் மனித இயலாமையில் எதற்கு இத்தனை கோபம்? போட்டியும் பொறாமையுமாய் ஆசையும் அவாவுமாய் பொருள் தேடி நிலம் தேடி பெயரும் புகழும் நிரந்தரமென்று தத்தம் இருப்பிற்கான போராட்டமாய் வாழ்