விழுந்த இலை
காற்றோடு காற்றாய்
இருப்பின்றி அலைவதுபோல்
காலவோட்டம் இழுக்குந்திசையெல்லாம்
பிடிப்பொன்றின்றி இழுபட்டுக்கொண்டு
உயிர் என்னுடல் நீங்கி வெளியே
உல்லாசமாய் திரிகின்றது
இருப்பும் பிடிப்பும் இருந்து
இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு
இருந்திருந்தால் உடலிந்நேரம்
வேரூன்றி விழுதுவிட்டு
கிளைபரப்பிக் கிடந்திருக்கும்
பெற்றவரும் உற்றவரும்
போன பின்னும்
நின்ற இடத்திலே
நின்று உலைந்திருக்கும்
இலை இப்போது
மல்லாந்து படுத்து
வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டிருந்தது
இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு
இருந்திருந்தால் உடலிந்நேரம்
வேரூன்றி விழுதுவிட்டு
கிளைபரப்பிக் கிடந்திருக்கும்
பெற்றவரும் உற்றவரும்
போன பின்னும்
நின்ற இடத்திலே
நின்று உலைந்திருக்கும்
இலை இப்போது
மல்லாந்து படுத்து
வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டிருந்தது
காற்று அதைப்
புழுதியோடு தூக்கி
வீட்டிற்கு வெளியே
தெருவில் போட்டது
இலை தெருத்தாரில்
முதுகு சொறிவது சுகமென்று
மீண்டும் மல்லாந்து
படுத்துக்கொண்டது
புழுதியோடு தூக்கி
வீட்டிற்கு வெளியே
தெருவில் போட்டது
இலை தெருத்தாரில்
முதுகு சொறிவது சுகமென்று
மீண்டும் மல்லாந்து
படுத்துக்கொண்டது
Comments
Post a Comment