Skip to main content

Posts

வாழ்ந்திருப்போம் இனிதாய்

 

Self-worth

Sometimes, academia makes you feel like a loser. The toxic academic culture makes you doubt your self-worthiness and the value of your intellectual contribution to society. I encountered several rejections last year concerning research grant applications, PhD scholarship applications, job applications and my first solo academic journal paper. There was so much negativity around me. I was mentally tired and ready to give up on my research career. This poem was written at the beginning of a long healing process. Know your self-worth. I look at my inbox Like a deminor Ready for the damage control Emails don’t excite me These days They disappoint me I come prepared to be disappointed I open the email Like unwrapping a box A bomb in it Knowing it would explode in my face Once opened Anyway Rebelliousness comes with price I read the impersonal message The standard response My time, effort and resources Not appreciated Not even acknowledged This time My heart doesn’t even flinch I came prepar...

நினைவுகள்

உக்கிரமாய் வெயில் உச்சி மண்டையால் இறங்கி தொண்டைக்குழியில் சொட்டு ஈரமில்லாமல் வறட்டிவிட பள்ளிவிட்டு வரும் வழியில் பசியும் தாகமும் ஒன்றாய்க் குடலைப் புரட்டி எடுக்க- வரமாய் செம்மமஞ்சள் நிறத்தில் ஜூஸ் வாங்கி வாயாலிறக்கி தொண்டைக்குழியை நனைத்து வயிறைக் குளிர்வித்து புளிப்புச் சுவையேறி நாக்குச் சப்புக்கொட்டி கடைசித்துளியையும் உறிஞ்சி எடுக்க வெள்ளைச்சீருடையில் வந்த நினைவும் எங்கேயாவது இருந்திட்டு அப்பா வாங்கிவரும் மிரண்டா சோடாவை அடித்துப் பிடித்து அமிர்தம்போல் நினைத்து ஒவ்வொரு மிடரையும் ஐயோ முடியப் போகுதே என்று மெதுவாய்க் குடித்து கடைசிச் சொட்டையும் பொறுமையாய் போத்தலைக் கவிழ்த்துப் பிடித்து வாயிலிட்டு நாவெல்லாம் செம்மஞ்சளாக்கி இரண்டு மிடர் உனக்குக் குறைவு என்று அப்பால் நிக்கும் சோதரனை கடுப்பாக்கி நாக்கு நீட்டிப் பழித்து அவனடிப்பதற்குள் ஓடியொளித்த நினைவும் சோடாப்போத்திலை திறக்கையில் முன்னறிவிப்பின்றி நுரையெல்லாம் படையெடுத்து வெளியே தள்ளுவதுபோல கடல்தாண்டிய தேசத்து கடற்கரையில் நிகழ்ந்த சூரிய அஸ்தமனக் காட்சி நினைவுச் சுரங்கத்தின் கதவைத் திறந்து நினைவுகளை அள்ளி வெளியில் கொட்டிவிட- கண்முன் பரவிக் கி...