Skip to main content

Posts

Showing posts from September, 2021

Courage

Imagine being forced to be quiet and obedient for so long. Imagine when you finally muster up your courage to take a step forward to find your life's purpose and happiness, only to be bullied and looked down on. Imagine the inner strength you need to navigate your internal struggle and push back the external forces. This is an experimental piece. How can we use classical art forms to address social issues?

-உறவுகள் ஒரு தொடர்கதை-

  வேண்டும் என்று எந்தப் பிள்ளையும் பிறப்பதில்லை பிள்ளை எதற்கு வேண்டும் என்று பெறுவோரும் ஆய்ந்தறிவதில்லை பிள்ளைக்காக வாழ்வோ வாழ்வுக்காகப் பிள்ளையோ எதுவாகினும் இருந்து விட்டுப்போகட்டும் பிள்ளைகள் ஒரு கட்டாயக் கட்டம் பெறுவது கடமை பெற்றதை வளர்ப்பது கடமை வளர்ந்தது பெற்றோரைப் பார்ப்பதும் கடமை கடமைகள் கடக்கமுடியாதொரு சமூகம் பெறுவதும் வளர்ப்பதுமாய் கடந்துபோகட்டும் கடந்து போகாதவரும் கடமைகளைத் துறந்தவரும் சாபங்களிலிருந்து விடுதலையடையட்டும் கடமைகள் கயிறாகி இறுக்காமல் போகட்டும் வாழ்க்கை கட்டளைகளில்லாமல் நதியாகி ஓடட்டும் உறவுகள் நதிக்கிளைகள் ஆகட்டும் அவை கடல் தேடிப்போகட்டும் நதிமூலத்தை நோக்கி எந்த நதியும் ஓடுவதில்லை கடல் தேடும் நதியை நதிமூலம் சாடுவதுமில்லை

Audre Lorde's Essays

  Audre Lorde. What can I say? Admiration ❤️ A few favourite lines from her essays: “For women, then, poetry is not luxury. It is a vital necessity of our existence. It forms the quality of the light within which we predicate our hopes and dreams towards survival and change, first made into language, then into idea, then into more tangible action.” “For women, the need and desire to nurture each other is not pathological but redemptive, and it is within that knowledge that our real power is discovered. It is the real connection which is so feared by a patriarchal world. Only within a patriarchal structure is maternity the only social power open to women.” “Any discussion among women about racism must include the recognition and the use of anger.” “Revolution is not a one-time event.” The most favourite quote by which I was introduced to Audre’s work, “The master’s tools will never dismantle the master’s house.” ✊🏽

The Paradise

It is one of those days. Transported back from spring to winter. The clouds weep like an adamant child. Cold seeps through the windows into the heart. The sweet spot under the quilt calls your name. You cannot resist the warmth it promises. Come to me, the bed calls you seductively. It weakens your mind. The body begs longingly, just get in. You avoid the ultimatum until you cannot take it anymore. Home. The soft, fluffy quilt. Roll, roll and roll the way up. There you go, little burrito. Tuck your toes and hold up to your nose. Let the warm embrace you through. Lay there still until you become a parcel of lamprais. Dream of a holiday in paradise. Roll from left to right then right to left. The bed is your universe. Stretch your body and tweak your toes. Paradise is not anywhere else. Here it is wrapped in a comfy quilt.

அவள் இருந்தாள்

அவள் இருந்தாள் நீண்டு நெளிந்து பரந்து கிடந்த-நிலப்பரப்பை கடக்க வேண்டும் என்று முயற்சி செய்யாமல் அவள் இருந்தாள் அதன் பாதி தூரத்தையாவது கடக்க வேண்டும் என்று ஒரு நினைப்பே இல்லாமல் அவள் இருந்தாள் அகால அமைதியுடன் பயணத்தை பற்றியொரு பதட்டமுமே இல்லாமல் அவள் இருந்தாள் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள் வியர்க்க வியர்க்க மூச்சுத்தள்ள அடித்துப் பிடித்து ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு தள்ளிக்கொண்டும் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள் அங்கங்கே சிலர் நடந்துகொண்டிருந்தார்கள் சாசுவாசமாக கையை வீசி வீசி பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு மண்ணைக் காலால் அளைந்துகொண்டு வாழ்க்கையை இரசித்து வாழ்வதாய் நினைத்துக்கொண்டு அங்கங்கே சிலர் நடந்துகொண்டிருந்தார்கள் சிலர் ஓடிக்களைத்து விழுந்து கிடந்தனர் மீண்டும் எழும்ப வலுவில்லாமல் தூக்கிவிட ஒரு மனிதரில்லாமல் நீண்டு தெரியும் பாதையை கையேலாததனத்துடன் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு சிலர் ஓடிக்களைத்து விழுந்து கிடந்தனர் அவள் இருந்தாள் இருந்து சாகாதே என்று சொல்பவரையும் எழுந்து ஓடு என்று முட்டித் தள்ளுபவரையும் வாழத் தெரியாதுனக்கென்று நகைப்பவரையும் சும்மா இருந்து என்ன பயன் என்று கே...