தாழமுக்கம் தருவிசை நின்று
எழும்பி விழும்பு வழி
திசைப்பயணம் செல்
புயலிலவே
பொழுதின்றி எத்திசையும்
எறியும் மனக்காற்றிதற்கு
தாழமுக்கம் தேவை இல்காண்.
வேரறுத்து வீடழித்து
சேதாரம் காட்டாது
எண்ணக் கோடறுத்து
புதுப்பெயல் வாரிச்சொரிந்து
வெள்ளமாய் உள்ளக்
கூட்டினிலே தாறுமாறாய்
ஓடிக்கிடக்கும் அது
வெள்ளம் கிளை திறந்து
அங்கங்கே பாயலாம்
வேர் சாயலாம்
ஓ பெருவிருட்சமாகலாம்
நின்றுபோம் காற்றொரு நாள்
வடிந்துபோம் வெள்ளம்
சம்பவத்திற்கு
வேர்தான் சாட்சி
திசைப்பயணம் செல்
புயலிலவே
பொழுதின்றி எத்திசையும்
எறியும் மனக்காற்றிதற்கு
தாழமுக்கம் தேவை இல்காண்.
வேரறுத்து வீடழித்து
சேதாரம் காட்டாது
எண்ணக் கோடறுத்து
புதுப்பெயல் வாரிச்சொரிந்து
வெள்ளமாய் உள்ளக்
கூட்டினிலே தாறுமாறாய்
ஓடிக்கிடக்கும் அது
வெள்ளம் கிளை திறந்து
அங்கங்கே பாயலாம்
வேர் சாயலாம்
ஓ பெருவிருட்சமாகலாம்
நின்றுபோம் காற்றொரு நாள்
வடிந்துபோம் வெள்ளம்
சம்பவத்திற்கு
வேர்தான் சாட்சி
Comments
Post a Comment