பெண்மையும் தாய்மையும்
தெரிவுகள்தான்
அடையாளங்களல்ல
அளவுகோல்களுமல்ல
பெண்
சக்தி
நான்
அவள்
இவள்
அறமும் அறிவும்
அகத்தே இருத்தி
ஆற்றலும் ஆளுமையும்
புறத்தே மிளிர
ஒரு பெண்
பெண்கள்
அவர்கள்
இவர்கள்
நிமிராமல்
நேர்கொண்டு பாராமல்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளில்லாமல்
ஞானச் செருக்கின்றியும்
ஒரு பெண்
பெண்கள்
அவர்கள்
இவர்கள்
கும்பிடத் தெய்வமல்ல
பாதுகாக்க பொக்கிசமல்ல
பண்பாட்டுக்கு பலிக்கடாவால்ல
புதுமைக்கு புதுசுமல்ல
பழமைப் பெண்
புதுமைப் பெண்
பெயரோடும் சுயத்தோடும்
எல்லாரும் பெண்கள்
அம்மா
அக்கா
தங்கை
தோழி
மகள்
மனைவி
உறவுப் பெயர்கள்
இருக்கலாம் போகலாம்
மாறலாம் மறையலாம்- வாழ்க
அவள் பெயரும் சுயமும்
மணமுடிக்கும் முன்
மணமுடித்த பின்
விதவையாயின்
விவகாரத்தாயின்
பெயரும் சுயமும்
தொலைவதில்லை
தொலைவதேதோ
வீண் அடையாளங்கள்தான்
பெண்
சக்தி
நான்
அவள்
இவள்
நாங்கள் பெண்கள்.
Comments
Post a Comment