ஊரிக்காட்டின் கடலோரம் ஒதுங்கிக் கிடந்தன அவர்களின் இலட்சியக் கனவுகள் வீடிழந்தோர் வாழ்விழந்தோர் சொந்த நிலமிழந்தோர் கடல் கடந்தோர் உயிரிழந்தோர் உடலுறுப்பிழந்தோர் வாழ்வோர் வாழ்ந்துகொண்டு சாவோர் ஊரிக்காட்டின் கடலோரம் ஒதுங்கிக் கிடந்தன அவர்களின் இலட்சியக் கனவுகள் சற்றுத்தூரத்தில் ஒரு வீடு இடிக்கப்பட்டு அது இருந்த தடயம் அழிக்கப்பட்டுக் கிடந்தது கூடவே அங்கு வாழ்ந்த மனிதரின் கனவும் கனத்த மனதோடு குனிந்து பார்க்கிறேன் கிளிஞ்சல்களுக்குள் சுதந்திரக் கனவு அரித்துப்போய் ஓட்டைகளோடு அநாதரவாய்க் கிடக்கிறது சுற்றுலாப் பயணிபோல் கடந்து போக முடியாமல் தடக்கி நிற்கிறேன்.